கோடை வெயிலிற்கு சிறந்த குளிர்பானங்கள் - Best cooldrinks for summer
கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் , வெயிலின் தாக்கமும் உச்சத்தை அடைந்து வருகிறது . இந்த காலத்தில் நமது உடலை பாதுகாப்பது மிகவும் அவசியம் . அதற்கு குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் . அவை இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள் என்றால் மிகவும் சிறந்தது . அந்த வகையில் , உடலுக்கு குளிர்ச்சியை அளித்து புத்துணர்ச்சியூட்டும் பானங்கள் பற்றி பார்போம் . மோர் : ஒரு புரோபயாடிக் (Probiotic) பானமாகும் , இது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது . இதனால் கோடையில் நம்மை அதிகம் பாதிக்கும் வயிற்று தொற்றுகளைத் தடுக்கிறது . ஒரு கிளாஸ் (200 மில்லி ) மோரில் சுமார் 30 கலோரிகள் (Calories) உள்ளன . ஒரு மண் பானையில் மோர் சேமித்து வைப்பது ஒரு தனித்துவமான சுவையை அளிக்கும் அதே வேளையில் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும் . இளநீர் : கோடைக்காலம் என்றாலே , நம் நினைவுக்கு வருவது இளநீர் தான் . எலக்ட்ரோலைட்டுகளால் (Electrolytes) நிரம்பியது . குறைந்த