Kambu Koozh benefits and recipe in tamil - கம்பு கூழ் செய்வது எப்படி தமிழில்

கம்பு கூழ் செய்முறை பார்ப்பதற்கு முன்பு அதன் நன்மைகள் பற்றி பார்ப்போம், 

கம்பு கூழ் நன்மைகள் :

Kambu or pearl millet benefits and recipe

தமிழனின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று தான் கம்மங்கூழ். 20 வருடங்களுக்கு முன்பு வரை கம்மங்கூழ் அனைவரது வீட்டிலும் சாதாரணமாக தயாரித்து குடித்து வந்தோம். ஆனால் தற்போது இந்த கம்மங்கூழ் அரிய பானமாக தள்ளுவண்டியில் விற்கப்பட்டு வருகிறது. இன்று வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. கோடைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் பலர் அதிக வெப்பத்தால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்படக்கூடும். குறிப்பாக நிறைய பேர் உடல் சூட்டினால் கஷ்டப்படுவார்கள். இந்த உடல் சூட்டைத் தணிப்பதற்கு ஏராளமான பானங்கள், மருந்துகள் போன்றவை விற்கப்படுகின்றன. முந்தைய காலத்தில் எல்லாம் நிறைய பானங்கள், மருந்துகள் எல்லாம் இல்லை. நம் முன்னோர்கள் வெயிலால் ஏற்படும் தாக்கத்தைத் தணிப்பதற்கு பழங்காலம் முதலாக கம்மங்கூழைத் தான் குடித்து வந்தார்கள்.

தானிய வகைகளுள் ஒன்றான கம்புவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதில் 15% புரோட்டீன் மற்றும் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், நியாசின், தையமின், ரிபோஃப்ளேவின் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதோடு அத்தியாவசியமான அமினோ அமிலங்களான மெத்தியோனைன் மற்றும் லிசித்தின், கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவகளும் அடங்கியுள்ளன.

இப்போது கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் காலையில் கண்ட உணவுகளை உட்கொள்ளாமல், கம்மங்கூழைத் தயாரித்துக் குடியுங்கள். முக்கியமாக கம்மங்கூழ் தயாரிப்பது மிகவும் எளிமையானது. அதுவும் இரவில் தயாரித்து, மறுநாள் காலையில் குடிக்க வேண்டிய பானம் என்பதால், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற அற்புதமான காலை உணவாகவும் இருக்கும்.

Kambu or pearl millet

உடல் சூடு குறையும்: 

வெயில் காலத்தில் உடல் சூட்டால் நிறைய பேர் கஷ்டப்படுவார்கள். இந்த உடல் சூட்டைத் தணிப்பதற்கு இளநீருக்கு அடுத்தப்படியாக சிறந்த பானம் என்றால் அது கம்மங்கூழ் தான். ஒருவர் கம்மங்கூழை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாகாமல் சீராக பராமரிக்கப்படும். அதோடு கம்மங்கூழ் உடலுக்கு உடனடி ஆற்றலையும் வழங்கும்.

இரத்த சோகை நீங்கும்: 

Kambu or pearl millet for anemia

கம்புவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த செல்களின் உற்பத்திக்கு அவசியமான ஓர் முக்கிய சத்தாகும். இந்த கம்மங்கூழை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அது இரத்த சோகையை சரிசெய்யும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க நினைத்தால், கம்மங்கூழை தினமும் குடித்து வாருங்கள்.

உடல் எடை குறையும்: 

Kambu or pearl millet for weight loss

கம்மங்கூழில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம், பசியுணர்வைக் குறைத்து, உடல் எடையைப் பராமரிக்க உதவும். மேலும் இது மெதுவாக செரிமானமாவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். கம்புவில் உள்ள அதிகமான நார்ச்சத்து, அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கும். எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், கம்மங்கூழை தினமும் காலையில் குடியுங்கள்.

நல்ல தூக்கம் வரும்: 

Kambu or pearl millet for better sleep

கம்புவில் உள்ள ட்ரிப்டோஃபேன், உடலில் செரடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். தினமும் இரவில் படுக்கும் முன் ஒருவர் ஒரு கப் கம்மங்கூழைக் குடித்தால், மன அழுத்தம் குறைந்து, இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

மாதவிடாய் கால வலிகள்: 

Kambu or pearl millet for periods pain
கம்புவில் மக்னீசியம் அதிகம் உள்ளது. எனவே பெண்கள் கம்மங்கூழைக் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்களைத் தடுக்கலாம். எனவே நீங்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாயின் போது வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்தால், தினமும் காலையில் கம்மங்கூழைக் குடித்து வாருங்கள்.

எலும்புகள் வலிமையாகும்: 

கம்புவில் கால்சியம் சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. கம்மங்கூழை ஒருவர் அன்றாடம் தவறாமல் குடித்து வந்தால், அதில் உள்ள கால்சியம் எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும். முக்கியமாக ஆர்த்ரிடிஸ் மற்றும் எலும்பு முறிவு உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடிப்பது மிகவும் நல்லது.

கம்பு கூழ் செய்முறை:

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பாரம்பரியமான கம்பங்கூழை எப்படி தயார் செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

Kambu or pearl millet koozh recipe

தேவையான பொருட்கள்:

கம்பு - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் 1 கப் கம்பை எடுத்து, அதை ஒரு மொறத்தில் இட்டு நன்றாக புடைத்து எடுத்து கொள்ளவும். பிறகு தண்ணீரில் ஊற வைத்து கல் மற்றும் தூசிகளை நீக்கிய பிறகு வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ளவும். கம்புவில் இருக்கும் உமியை நன்றாக புடைத்து எடுத்து விடவும். ஒரு வேளை ரெடிமேட் கம்பு கிடைத்தால் மிகவும் நல்லது.

நன்கு காய்ந்த கம்பை மிக்சியில் போட்டு நறுநெறு பதத்தில் அரைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரம் எடுத்து நீங்கள் எடுத்துக்கொண்ட கம்பு மாவுவிற்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் ஓரளவிற்கு கொதி ஏறிய பிறகு கம்பு மாவை சேர்த்துக்கொள்ளலாம். மாவு தண்ணீருடன் சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அவற்றை ஒரு கரண்டி வைத்து கிண்ட வேண்டும். பின்பு உப்பு சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும்.

அவை நன்றாக கொதித்து கெட்டியாகிய பிறகு கீழே இறக்கி ஆற வைக்கவும். பின்பு சில மணி நேரம் கழித்து அதனுடன் தயிர் மற்றும் வெங்காயம் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்றாக கலக்கி குடித்தால் சுவை நன்றாக இருக்கும். இவற்றுடன் உப்பு மிளகாய் போட்ட மாங்காய், வத்தல், தக்காளி தொக்கு, ஊறுகாய், உப்பு மிளகாய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம். மேலும் இவற்றை மாலை அல்லது இரவு நேரத்தில் செய்து மறுநாள் காலையில் குடிப்பது மிகவும் நல்லது.


இந்த கோடை காலங்களில் வெயிலின் உஷ்ணத்தை தணிக்க இது போன்று கூழ் செய்து பருகினால் மிகவும் நன்று நமது உடல் சூட்டை குறைக்கும். இதேபோல் ராகி கூழ் செய்வது எப்படி என்று எனது இன்னொரு பதிப்பில் பதிவிட்டு இருக்கேன் அதையும் செய்து பாருங்கள். அனைவரும் இதே போல் செய்து பருகி பயன்பெறுங்கள். நன்றி!!!   


Comments

Post a Comment

Popular posts from this blog

புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும் துப்பறியும் புதிர்கள்! - பகுதி 1 : Detective riddles part 1

கோடை வெயிலிற்கு சிறந்த குளிர்பானங்கள் - Best cooldrinks for summer