புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும் துப்பறியும் புதிர்கள்! - பகுதி 1 : Detective riddles part 1
புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும் துப்பறியும் புதிர்கள்!-பகுதி 1
வெற்று அறை மர்மம்:
வேலன் ஒரு மண் தரையையும் ஒரே ஒரு ஜன்னலையும் கொண்ட ஒரு அறையில் அடைக்கப்படுகிறார். அந்த அறையில் ஜன்னல் மிகவும் உயரமாக உள்ளது, அதனால் அவர் ஜன்னலை அடைய முடியாது. அறையில் இருப்பது மண்வெட்டி மட்டுமே. அவரால் உணவு அல்லது தண்ணீரைப் பெற முடியாது, தப்பிக்க இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது அல்லது அவர் இறந்துவிடுவார். வேலனால் சுரங்கப்பாதையும் தோண்ட முடியாது, ஏனென்றால் அதைச் செய்ய அவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும். வேலன் எப்படி அந்த அறையில் இருந்து தப்பிப்பார்?
பதில்:
வேலன் ஜன்னலுக்கு அடியில் ஒரு மண் குவியலை உருவாக்க மண்வெட்டியைப் பயன்படுத்த வேண்டும், அதனால் அவர் அதன் மீது ஏறி சென்று தப்பிக்க முடியும்.
ஜுஸில் விஷம்:
ராஜும் ரவியும் ஒன்றாக ஜூஸ் அருந்த வெளியே சென்றனர். இருவரும் ஒரே ஜூஸியே ஆர்டர் செய்தனர். ராஜு உண்மையில் தாகமாக இருந்தார். அதனால் ரவி ஒரு கிளாஸ் குடித்து முடிக்க எடுக்கும் நேரத்தில் ராஜு ஐந்து கிளாஸ் ஆர்டர் செய்து குடித்து முடித்தார். இருவர் குடித்த ஜூஸ்யிலும் விஷம் இருந்தது, ஆனால் ரவி மட்டுமே இறந்தார். எப்படி?
பதில்:
தற்கொலையா இல்லையா?
ஒரு பலமாடி கட்டிடத்தின் கீழே ஒரு இறந்த பெண் உடல் கிடக்கிறது. மாடி ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது போல் தெரிகிறது.
காவலர் வந்ததும், கட்டிடத்தின் முதல் தளத்திற்குச் சென்று, மூடியிருந்த ஜன்னலைத் திறந்து, ஒரு நாணயத்தைத் தரையை நோக்கி சுண்டிவிடுகிறார். அவர் இரண்டாவது மாடிக்குச் சென்று அதையே செய்கிறார். கட்டிடத்தின் மேல் தளத்திற்கு வரும் வரை அவர் இதைத் தொடர்கிறார்.
திரும்பி வந்து பார்த்தபோது, இது தற்கொலை அல்ல கொலை என்று கூறுகிறார். அது அவருக்கு எப்படி தெரியும்?
பதில்:
காவலர் ஒவ்வொரு தளத்திற்கும் சென்றபோது ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் அவளால் எந்த மாடியிலிருந்தும் குதித்திருக்க முடியாது.
ஒரு இறுதிச் சடங்கில் காதல்:
ஒரு பெண் தன் தாயின் இறுதி சடங்கில் இருக்கிறாள். இறுதிச் சடங்கில் யார் என்று தெரியாத ஒரு அழகான பையனை அவள் சந்திக்கிறாள். அவள் இறுதிச் சடங்கில் பிஸியாக இருந்தாள், அதனால் அவன் கிளம்பும் முன் அவனிடம் மொபைல் எண்ணைக் கேட்க நேரமில்லை. அவள் அவனைக் கண்டுபிடிக்க மிகவும் கடினமாக முயற்சி செய்தாள், ஆனால் அவன் யார், எப்படி அவனைத் தொடர்புகொள்வது என்பது யாருக்கும் தெரியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அவளது சகோதரி இறந்துவிடுகிறார், இது ஒரு கொலை என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சகோதரியை கொன்றது யார்?
பதில்:
அவளே தன் சகோதரியைக் கொன்றாள். தன் குடும்பத்தில் வேறு யாராவது இறந்து விட்டால், தன் தாயின் இறுதிச் சடங்கில் சந்தித்தவர் மீண்டும் தோன்றுவார் என்று அவள் எதிர்பார்த்தாள்.
திருடப்பட்ட மோதிரம்:
வருண் தனது பழங்கால குடும்ப மோதிரத்தை யாரோ திருடிவிட்டதாக புகாரளிக்க போலீசாரிடம் சென்றார். போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றபோது, ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதையும், உள்ளே பொருட்கள் அலங்கோலமாக இருப்பதையும், கம்பளத்தின் மீது அழுக்கு கால்தடங்கள் இருப்பதையும் கவனித்தனர். ஆனால், உடைந்ததற்கான வேறு எந்த அறிகுறியும் இல்லை.
பதில்:
போலீசார் "குற்றம் நடந்த இடத்திற்கு" வந்தவுடன், வருண் தான் ஜன்னலை உடைத்து இந்த நாடகத்தை அரங்கேற்றியிருப்பதை அறிந்தனர். ஏனென்றால் உடைந்த ஜன்னல் கண்ணாடி வீட்டின் வெளியே இருந்தது, அதாவது அது உள்ளே இருந்து உடைக்கப்பட்டது.
கப்பலில் திருடன்:
ஒரு ஜப்பானிய கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேறி கடலில் சென்று கொண்டிருந்தது. கேப்டன் கப்பலின் சில பகுதிகளுக்கு எண்ணெய் போடச் செல்லும் போது பாதுகாப்பாக இருப்பதற்காக தனது மோதிரத்தை கழற்றி தன் மேசையில் வைத்துவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, மோதிரத்தை காணவில்லை. அவர் தன் குழுவில் உள்ள மூன்று உறுப்பினர்கள் மோதிரத்தை எடுத்து இருக்கலாம் என்று சந்தேகித்தார், மேலும் அவர் சென்ற பத்து நிமிடங்களுக்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று அவர்களிடம் கேட்டார்.
சமையல்காரர், "நான் இன்று இரவுக்கு தேவையான உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தேன்" என்றார்.
பொறியாளர் கூறினார், "நான் என்ஜின் அறையில் வேலை செய்தேன், எல்லாம் சீராக இயங்குவதை உறுதி செய்தேன்."
“கப்பலில் நம் நாட்டு கொடியை யாரோ தவறுதலாக தலைகீழாக கட்டி இருந்தார்கள் அதனால் நான் கொடியை திருத்திக் கொண்டிருந்தேன்” என்று கடலோடி கூறினார்.
பிறகு மோதிரத்தை திருடியது யாரென்று கேப்டனுக்கு உடனே தெரிந்தது. எப்படி?
பதில்:
அது தெளிவாக கடலோடி தான். ஏனென்றால் இது ஒரு ஜப்பானிய கப்பல் மற்றும் ஜப்பானிய கொடி வெள்ளை நிறத்தில் ஒரு சிவப்பு புள்ளியுடன் நடுவில் இருந்தது. அதை தலைகீழாக தொங்கவிட்டு இருக்க முடியாது.
இதையும் பாருங்கள் - புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும் துப்பறியும் புதிர்கள்! - பகுதி 2
Very interesting
ReplyDeleteநன்றி
Delete